உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ கைதாக அதிக வாய்ப்பு – பாலித எதிர்வு கூறுகிறார்



மஹிந்த  ராஜபக்ஸ தனது காலத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலைகளை செய்து நாட்டை ஆட்சி செய்ததாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மஹிந்த காலத்தில் மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது தமது கோரிக்கையை முன்வைத்த அன்டனி பெர்னாண்டோ என்ற மீனவர் கொல்லப்பட்டார்.

அத்துடன்ரத்துபஸ்வலவில் குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த  ராஜபக்ஸ இரண்டு ஆண்டுகளை இழந்தார். பாத யாத்திரையில் கண்டியில் இருந்து கொழும்புக்கு வரும் போது மேலும் இரண்டை இழப்பார்.

பாத யாத்திரையில் வருவோர் தொகுதி அமைப்பாளர் பதவிகளையும் கட்சியின் அங்கத்துவத்தையும் இழப்பார்கள்.

மேலும் பாத யாத்திரையின் போது அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் நடத்திய குழுவுடன் இணைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது சட்டவிரோதமாக மக்களை கூட செய்வது. இதில் மஹிந்த  ராஜபக்ஸவும் அடங்குகின்றார்.

சட்டவிரோதமாக கூட்டம் சேர்ந்த சம்பவம் தொடர்பில் இலங்கையின் தலைவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முதல் தலைவராக மஹிந்த  ராஜபக்ஸ இதில் சிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 1994 ஆம் ஆண்டு புரட்சியை ஏற்படுத்தினர். திருடர்களே தற்போது புரட்சி செய்ய பார்க்கின்றனர் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=tIL6jsBGPpw” width=”560″ height=”315″]

 

(நன்றி – லங்காசிறி)

Related posts

அவிசாவலை கொஸ்கம சம்பவம் குறித்து துரிதமாய் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

wpengine

நாட்டுக்கு மேலும் 4 மில்லியன் ‘சைனோபாம்’

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப் பூர்த்தி இன்று…

wpengine