உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான கட்சிகள் இரண்டும் தனித்தனியே போட்டியிட வேண்டும் – அர்ஜூன ரணதுங்க



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டு பின்னர் இணைந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பயாகலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்க கொள்கை உள்ளுராட்சி மன்றங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பிரதான கட்சிகள் தங்களது அடையாளங்களை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் இற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில்..

wpengine

கணவனின் அசிட் வீச்சில் மனைவி பலி…

wpengine

மீண்டும் குறைவடையவுள்ள லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

wpengine