உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபை பாரியளவு நட்டத்தில்.. – ஊழல் எதிர்ப்பு முன்னணி



நிதி அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை மின்சார சபை 5781 மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்குவதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஆலோசகர் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கையில்,

கடந்த வருடத்தின் போது ஒரு மணித்தியாலயத்திற்கு மின் உற்பத்தி அலகுக்கு 15.7 ரூபாவே அறவிடப்பட்டது.

எனினும் இவ்வாண்டில் அத்தொகையானது 17.54 ரூபாவாக உயர்ந்துள்ளது. இதன்பிரகாரம் மின் அலகுக்காக 2.41 ரூபா நாட்டிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த முன்னணி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தல்

wpengine

இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு

wpengine

இன்று(27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine