ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்காட்லாந்தில் தொலைந்த கமெரா, ஸ்வீடனில் கிடைத்த அதிசயம்…



பிரிட்டனைச் சேர்ந்தவர் 37 வயது அடேல் டிவோன்ஷைர், ஸ்கூபா டைவர். 2013-ம் ஆண்டு தண்ணீர்ப் புகாத ஃபூஜி கேமராவை, கடலில் தொலைத்துவிட்டார். 500க்கும் மேற்பட்ட அரிய படங்கள் அந்த கேமராவுக்குள் இருந்தன. உழைப்பு வீணாகிவிட்டதை நினைத்து அடெலுக்கு மிகுந்த வருத்தம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 600 கி.மீ. தொலைவில் அடெலின் கேமரா கண்டெடுக்கப்பட்டிருக்கிறது! லார்ஸ் மோஸ்பெர்க், ஸ்வீடன் கடற்கரையில் ஒதுங்கியிருந்த கேமராவைக் கைப்பற்றியிருக்கிறார்.

‘‘சிவப்பு நிறத்தைப் பார்த்தவுடன் அருகில் சென்றேன். அழகான பிளாஸ்டிக் கேமரா. அழுத்திப் பார்த்தேன். வேலை செய்தது. கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, ஆராய்ச்சியாளர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது புரிந்தது. சுமார் 500 படங்கள் இருக்கும். ஜூலை 2013 கடைசியாகக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

வீடியோவில் கேட்ட குரலை வைத்து, அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்று முடிவு செய்தேன். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரியவரிடம் சேர்க்க நினைத்தேன். ஃபேஸ்புக்கில் சில படங்களை வெளியிட்டேன். சில மணி நேரத்தில் விடை கிடைத்துவிட்டது.

அடெலிடம் சில கேள்விகள் கேட்டு, உறுதி செய்துகொண்டேன். பிறகு கேமராவை ஒப்படைத்துவிட்டேன்’’ என்கிறார் லார்ஸ் மோஸ்பெர்க். ‘‘ நான் சேகரித்த அரிய படங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டன!’’ என்று மகிழ்கிறார் அடெல். ஸ்காட்லாந்தில் தொலைந்த கேமரா, ஸ்வீடனில் கிடைத்திருக்கிறது.

Related posts

ஓடும் ரயிலில் கற்பழிப்பு – காட்டிக்கொடுத்தது கெமரா

wpengine

ஏஞ்சலோ’விற்கு 14 மாதங்களுக்கு 236 இலட்சம், மாலிக்கு 127 இலட்சம்

wpengine

TNA மற்றும் UNP ஒப்பந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வைரல்..

wpengine