உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வட் வரி திருத்தச் சட்டமூலம் குறித்த இன்றைய நாடாளுமன்ற விவாதம் பிற்போடப்பட்டது.



வட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த போதும், அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தை நடத்துவதற்கான திகதி நாளைய தினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட் வரி திருத்தச் சட்ட மூலத்துக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடையை ஏற்படுத்தியுள்ளது இதன்காரணமாக இதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள அனுமதியில்லை.

இந்த நிலையில் இன்றையதினம் பாராளுமன்றத்தில் விளையாட்டு ஒழுங்குகள் தொடர்பான சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

wpengine

சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை

wpengine

இன்றிலிருந்து சில மாகாணங்களில் மழை…

wpengine