உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்



துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதையட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரி ழந்தனர். 1500 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 8000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 இராணுவ தளபதிகள் அடங்குவர்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் 9000 அரசு அதிகாரிகள பதவியில் இருந்து பணி நீக்கப்பட்டுள்ளனர். ஒரு மாகாண மேயர், 29 நகர மேயர்கள், மற்றும் 8777 பொது பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Related posts

எரிபொருள் விலைச்சூத்திரம் நாளை(21) முதல்…

wpengine

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

wpengine

வட மாகாண தாதியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்..

wpengine