விளையாட்டு

கெய்ல் இனது ஏமாற்றமும் சங்காவினது அசைத்தலும் – ஜமைக்கா அணி அபார வெற்றி



கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 17வது லீக் போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.

இதில் தொடக்க வீரர் கெய்ல் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும் அடுத்து வந்த சங்கக்காரா அதிரடியால் 65 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் பின்னர் 6வது வீரராக களம் இறங்கிய சாஹிப் அல் ஹசன் 17 பந்தில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள் குவித்தனர்.

இதற்கடுத்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அணி களமிறங்கியது. ஜமைக்கா அணியின் அபார பந்தில் இந்த அணி திணற ஆரம்பித்தது.

இதனால் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற அந்த அணி 15.5 ஓவரில் 75 ஓட்டங்களில் சுருண்டது.

இதனால் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜமைக்கா அணி 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

Related posts

ஐசிசி ரிச்சர்ட்சனின் பதவிக்கு மனு நியமனம்…

wpengine

பந்தினை சேதப்படுத்தி விவகாரம் – சந்திமாலின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு…

wpengine

உலக கிண்ண கால்பந்து போட்டி மீளவும் ஒத்திவைப்பு

wpengine