உள்நாட்டு செய்திகள்

நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்க முடியாது – ஹட்டனில் கடையடைப்பு



மக்கள் பாவனைக்கான அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த நிலையில் கோழி இறைச்சிக்கான விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கான விலை 495 ரூபாவாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த விலையின் அடிப்படையில் கோழி இறைச்சி வியாபாரத்தினை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாகத் தெரிவித்து, ஹட்டனில் இன்று கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவ, நோர்வூட், டயகம, மஸ்கெலியா, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய பிரதான நகரங்களில் கோழி கடை உரிமையாளர்கள் ஒன்றினைந்து இந்த கடையடைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில், ஹட்டன் சக்தி மண்டபத்தில் கடை உரிமையாளர்கள் ஒன்றுகூடி பொலிஸாருக்கு மணு ஒன்றையும் கையளித்தனர்.

கோழிகளுக்கான மருந்து மற்றும் தீண் ஆகியவற்றில் வட் வரி அதிகரித்துள்ளமையினால் 580 ரூபாவிலிருந்து குறைவாக கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக கோழி கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்

Related posts

இலங்கை அணியில் கொரோனா கொத்தணி

wpengine

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

SLFP – SLPP திங்களன்று விசேட பேச்சுவார்த்தை

wpengine