உள்நாட்டு செய்திகள்

சகல அரச வைத்தியசாலைகளிலும் இரத்தப்பரிசோதனை – ராஜித



அரச ஆதார வைத்தியசாலை மற்றும் அரச மாவட்ட வைத்தியசாலை என்பவற்றில் சகல விதமான இரத்தப் பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்காக வேண்டிய சகல வைத்தியசாலைகளுக்கும் “ஒடோ அனலைஸர் இயந்திரம்” பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த இயந்திரத்தின் மூலம் 3 செக்கன்களுக்கு 16 இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இதன்பிறகு இரத்தப் பரிசோதனைகளை அரச வைத்தியசாலைகளில் செய்து கொடுக்குமாறு வேண்டும் சுற்று நிருபம் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அரச பிரதான வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் இரத்த பரிசோதனை நிலையங்களை நடாத்திச் செல்லத் தேவை ஏற்படாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி…

wpengine

2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது – பிரான்ஸ் தலைவர் மரீன்

wpengine

பிரான்ஸ் தேடுவது மஹிந்தவை போன்றதொரு தலைவரையே – விமல்

wpengine