உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம்..



கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்திற்கு பதிலாக 300 மெகாவோல்ட் மின் உற்பத்தி செய்யக் கூடிய திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவே இலங்கையில் முதல் திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையமாகும்.
இதை உருவாக்குவதற்கான கேள்விப்பத்திரங்களை கோருவதற்காக பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.
நவம்பர் மாதம் நடைமுறைப்படுத்த இருக்கும் இந்த திட்டத்திற்கான கேள்விப் பத்திரங்களை கோருவதற்காக தகுந்த முதலீட்டாளர்களை தெரிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபையிடம் பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவைக் குழு குறிப்பிட்டுள்ளது.
சம்பூரில்  இந்திய நிதி உதவியுடனும், ஹம்பாந்தோட்டையில்  சீனாவின் வணிக திட்டத்தின் உதவியுடனும் இந்த திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம் அல்லது அனல்மின் நிலையத்தை அமைக்க ஜப்பானும் தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Azeem Kilabdeen

இலங்.ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியார் துறையிடம்…

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசு தீர்மானம்.

wpengine