உள்நாட்டு செய்திகள்

பாரத லக்‌ஷ்மன் கொலை வழக்கின் விசாரணை நிறைவு



பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாக மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

இதன்போது பிரதிவாதியான துமிந்த சில்வா, சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு நீதிபதிகளின் அனுமதியைக் கோரியிருந்தார். அதற்கான விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால், அந்த வேண்டுகோளை நிராகரிப்பதாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது

Related posts

மேலும் 182 பேர் வீடுகளுக்கு

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 514 பேர் சிக்கினர்

wpengine

கையடக்கத் தொலைபேசி கட்டணங்கள் தொடர்பான அறிவித்தல்!

Azeem Kilabdeen