உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

GMOA இன்று அவசர செயற்குழு கூட்டமொன்றை கூட்டுகின்றது



அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அவசர செயற்குழு கூட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவையின் நம்பகத்தன்மையை பாதுகாப்பது தொடர்பான பல விடயங்கள் இதன் போது ஆராயப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் நவீன் சொய்சா தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வைத்தியர்கள் அல்லாத சிலர் போலி அனுமதி பத்திரங்கள் ஊடாக வைத்திய சேவையில் இணைந்துள்ளதாகவும் இதனால் பொது மக்களின் சுகாதார நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சைட்டம் விவகாரம் – கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கான சட்டமூலம், இன்று…

wpengine

சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை…

wpengine

இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் முழுமையான விபரம்

wpengine