விளையாட்டு

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளரும் இராஜினாமா



இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ராஜினாமா செய்துள்ளார். யூரோ 2016 கிண்ணப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து இவ்வாறு பதவி விலகியுள்ளார். ஐஸ்லாந்து அணியிடம் இங்கிலாந்து தோல்வியைத் தழுவியது.

68 வயதான Roy Hodgson தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்தின் முகாமையாளராக Roy Hodgson  கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்காக மன்னிப்பு கோரிய ஹொட்கசன், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வழமையானது என அவர் தெரிவித்துள்ளார்.

பலம்பொருந்திய இங்கிலாந்து அணி பலவீனமான ஐஸ்லாந்து அணியிடம் நொக்அவுட் சுற்றில் 2க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்து அணி முக்கிய போட்டித் தொடர் ஒன்றில் சாம்பியன் பட்டம் வெல்வதனை தாம் எதிர்பார்த்து காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

08வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி..

wpengine

திசர குறித்து சமரவிக்கிரம கருத்து – எதிர்வு கூறலினையும் முன்வைத்தார்….

wpengine

ஆப்கான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பினார் சனா..

wpengine