உள்நாட்டு செய்திகள்

வீடுகைளை இழந்தோருக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுப்பதே அரசின் நோக்கம் – ரிஷாத்


வீடுகளை இழந்த அனைவருக்கும் இருப்பிடத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும்  நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு புனர்வாழ்வுத்  திட்டத்தின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
வடமாகாணத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கான தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அதற்கான வேலை திட்டத்தை மேற்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 71ம் ஆண்டு நிறைவு ஒத்திவைப்பு..

wpengine

சைட்டம் விரோதிகளின் இரவு நேரப் பாரிய போராட்டம்..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ்ட் வீதிக்கு பூட்டு…

wpengine