உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

டேவிட் கமரோன் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு



பிரித்தானிய பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக டேவிட் கமரோன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக கமரோன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கு அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என 52 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். விலக வேண்டாம் என 48 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதற்கமைய பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கமைய தனது பதவியை இராஜினாமா செய்து கொள்ளவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின் பெறுபேறுகள் வெளியானமையை அடுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட மூவரும் பிணையில் விடுதலை…

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது

wpengine

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமான் கொலை – கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு.

wpengine