உலக செய்திகள்

பிரித்தானிய சர்வஜன வாக்கெடுப்பு இன்று



பிரித்தானியா ஐரோப்பிய சங்கத்தில் தொடர்ந்தும் நிலைத்திருப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானமிக்கதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான சர்வஜன வாக்கெடுப்பு இலங்கை நேரப்படி இன்று காலை 11. 30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு அந்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிவரை நடைபெறவுள்ளதாக  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் 6 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். பிரித்தானிய வரலாற்றில் இதுவே தேர்தல் ஒன்றில் கலந்துகொள்ளும் அதிகமான வாக்காளர் எண்ணிக்கை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பிரித்தானிய வரலாற்றில் நாடு முழுவதும் நடாத்தப்படும் இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பும் இதுவென கூறப்படுகின்றது.

பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க வேண்டும் எனக் கூறும் பிரதமர் டேவிட் கெமரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு இலங்கையிலிருந்து 4 அமைச்சர்கள் பிரித்தானியா சென்றுள்ளனர்.

இந்த தேர்தலில், பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்க வேண்டுமா? இல்லையா? என்ற இரண்டில் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உருமாறிய கொரோனா வகைகளுக்கு WHO இனால் புதிய பெயர்கள்

wpengine

வியட்நாம் அதிபர் இந்தியா விஜயம்…

wpengine

தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் எடுக்கலாம் என நீதிமன்றம் அறிவிப்பு…

wpengine