உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா எதிர்வரும் 07ம் திகதிவரையில் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவினை இன்று புதன்கிழமை பிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகிய நால்வருக்குமே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று..

wpengine

மாகாண ரீதியிலாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு

wpengine

நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் றிஷாட் பதியுதீன்

Azeem Kilabdeen