உள்நாட்டு செய்திகள்

விஸ்தரிப்புடன் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யத் திட்டம்



பலாலி விமான நிலையமானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாவனையில் இல்லாமல் இருக்கும் பலாலி விமான நிலையத்தினை மேலும் 26 ஹெக்டர் நிலப்பரப்பின் மூலம் விரிவுபடுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்கு சிவில் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அபிவிருத்திக்காக 750 மில்லியன் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கல்பிட்டி பிரதேசத்தின் சுற்றுலா வியாபாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

நுளம்புகள் வளரும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 25,000 ரூபாவை தண்டப்பண யோசனை…

wpengine

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்..

wpengine

மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

wpengine