விளையாட்டு

கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே இல்லாதிருக்கும் – வசீம் அக்ரம்



சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரமுக்கு இப்போது தான் வாழ்க்கையில் புத்துணர்வான திருப்பு முனை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு ஹீயூமா என்பவரை வசீம் அக்ரம் திருமணம் செய்தார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. அப்போது ஹியூமாவை புற்றுநோய் தாக்கியது.

வசீம் அக்ரம் கடும் முயற்சி செய்தும் கடந்த 2009ம் ஆண்டு சென்னை அப்பலோ மருத்துவமனையில் ஹியூமாவின் உயிர் பிரிந்தது.

அதற்கு பின் குழந்தைகளை அவரே வளர்த்து வந்தார். இதன் பின்னர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஷெனிரா தாம்ப்சனுடன் காதல் ஏற்பட்டு அவரை கடந்த 2013ம் ஆண்டு வாசிம் அக்ரம் திருமணம் செய்தார்.

இந்நிலையில் கராச்சி நகரில் நேற்று நடந்த பிரிடல் ஃபேஷன் பரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பாகிஸ்தானின் பாரம்பரிய உடையில் வலம் வந்து கலக்கினர்.

சோகங்களால் கலையிழந்த வசீம் அக்ரமின் முகத்தில் இப்போது தான் சிரிப்பை பார்க்க முடிகிறது.

Related posts

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியது

wpengine

தங்க வேட்டையை ஆரம்பித்தது இலங்கை

wpengine

பந்துவீச்சு சோதனைக்கு சென்னை செல்கிறார் தரிந்து கௌஷால்

wpengine