உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை



தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.

இன்று காலை தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சாரச சபை அறிவித்துள்ளது.

சுமார் 50 நிமிடங்கள் மின்சாரத் தடை நீடித்ததாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

புதிய மற்றும் பழைய லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலையங்களின் விநியோகம் துண்டிக்கப்பட்டதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கென்னியன் முதல் லக்ஷபான வரையிலான மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

50 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் விநியோகம் மீளவும் வழமையான நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு..

wpengine

வாஸ் குணவர்தனவின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு…

wpengine

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று

wpengine