உள்நாட்டு செய்திகள்

ஹப்புத்தளையில் அதிசக்திவாய்ந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்பு



ஹப்புத்தளை, கஹகொல்லை தோட்டப்பகுதியிலிருந்து அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இரண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதென ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்த பொதியொன்று தொடர்பில், பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொலிஸார்,  பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் அதிசக்தி வாய்ந்த ஜே.ஆர் ரக கைக்குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அது குறித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு அறிவித்து, அவரின் உத்தரவுக்கமைய குண்டுகள் செயலிழக்கும் விசேட பொலிஸ் பிரிவினரால் கைக்குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

Related posts

முதலாம் திகதி நாடு திறக்கப்படும்

wpengine

ஷான் புதா பிணையில் விடுவிப்பு

Azeem Kilabdeen

ஶ்ரீ.சு.கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்..

wpengine