உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் – வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்..



வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெடி விபத்தினால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள வெடிப் பொருள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் வீதி திறக்கப்பட்டமைக்கு எதிராகப் பிரதேச மக்கள் நேற்றைய தினம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த வீதியில் போக்குவரத்து நேற்றிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்க்கொல்லி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 200 மில்லியன் தேடும் பாரிய பணியில் நீங்களும் இணையுங்கள்

wpengine

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவருக்கு பிடியாணை..

wpengine

ஜனாதிபதி – முதலமைச்சர்களுடனான சந்திப்பு இன்று

wpengine