ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அரசாங்க அதிகாரிகளின் மிரட்டலால் சில சிரேஷ்ட அதிகாரிகளை கைது செய்வதில் சிக்கல்



ஐந்து சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை கைது செய்வதற்கு உள்ளக ரீதியான எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூல கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்கும் சந்தர்ப்பத்தில், ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் நேற்றையதினம்  குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்;

சுற்றுலாத் திணைக்களம் தொடர்பில் ஐந்து சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட போது, ஏனைய அரசாங்க அதிகாரிகள் அதற்கு எதிராக மகஜர் ஒன்றை கையொப்பமிட்டனர்.

இதனால் கைது செய்வது குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரப்பட்டது.

இந்த அதிகாரிகளில் இரண்டு பேர் நிதி அமைச்சில் கடமையாற்றுவோராவர்.

கைது செய்யப்பட்டால் தாம் பிரதிநிதித்துவம் செய்யும் சபைகளிலிருந்து விலகப் போவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளனர்.

கைது செய்வது தொடர்பிலான பிரச்சினை அரசாங்க அதிகாரிகள் தொடர்பிலான பிரச்சினையாகும்.

அரசாங்க சேவையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை.

பொலிஸ் திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களம் போன்றவற்றின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது

wpengine

ஜனாதிபதியின் குரலைப் போன்று ஒருவர் – CID விசாரணை ஆரம்பம்

wpengine

இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த நபர்: உறவினர்கள் ஷாக்

wpengine