உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்



அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 30 பேரின் வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது.

குறித்த நிதியினைக் கோரி துணை மதிப்பீடு பத்திரமொன்று நிதி அமைச்சரின் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றையதினம்(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக நிதி கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த துணை மதிப்பீடு மூலம் அமைச்சர் சரத் பொன்சேகா 7 கோடி ரூபாய் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு சில அமைச்சர்களுக்கு இரண்டு வாகனங்களுக்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த  மதிப்பீட்டு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவை வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

சாந்த அபேசேகர 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine