உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை அபிவிருத்திக்கு அதிக வட்டியின்றி ரூ.600 பில்லியன் கடனுதவி



G7 மாநாட்டினை தொடர்ந்து எதிர்கால இலங்கையின் அபிவிருத்திக்கு ஜப்பான் பெரும் பங்களிப்பினை வழங்க முன்வந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நிதி அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் விவசாயம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்க ஜப்பான் இணங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் அதிக வட்டி இல்லாத முறையில் கடன்களை பெற்றுக்கொள்ள உள்ளதோடு யென் மற்றும் ரூபாவிற்கிடையிலான தொடர்பை மேம்படுத்த உள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.

இதேவேளை, வாகன இறக்குமதி விலை மற்றும் வரி தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு காரணம் நாட்டின் வாகன அளவை கட்டுப்படுத்தவும் சூழல் தொடர்பில் பாதுகாப்பினை ஏற்படுத்தவுமே குறுகிய கால பெருமதி உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

Related posts

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் கோத்தபாய பாரிய ஊழல், மோசடிகள் விசாரணைக்குழுவில்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் அதிகரிப்பு…

wpengine

டெங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 310 ஆக உயர்வு

wpengine