உள்நாட்டு செய்திகள்

இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு சீசெல்ஸ் ஒத்துழைப்பு



இலங்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்க தயார் என்று சீசெல்ஸ் அறிவித்துள்ளது.

சீசெல்ஸின் சமூக மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சன்ட் மேர் இதுகுறித்து கூறுகையில்;

இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் உறவை கட்டியெழுப்ப இது உதவும் என்றும், அரசாங்கம் என்ற வகையில் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் சீசெல்ஸ் உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க அந்நாடுகளுடன் இணைந்து செயற்பட தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீசெல்ஸின் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குடும்பத்தினர் நிதி பரிமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று குற்றச்சாட்டு தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில்..

wpengine

முல்லைத்தீவு மாவட்ட தமிழ் நீதிபதிக்கு எதுவித அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை: அவர் திட்டமிட்டே நாட்டைவிட்டு ஓடினார் – CID

wpengine

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட்

wpengine