உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தாஜுதீன் கொலை விவகாரம் – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு



றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடினின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 23ம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், பின்னர் தாஜூடினின் மரணம் தொடர்பில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவரை, மீளவும் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 9ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தாஜுதீன் கொலை – இரகசிய அறிக்கை சிக்கியது

wpengine

மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட ஜானதிபதி ஆணைக்குழு…

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு…

wpengine