உலக செய்திகள்

flybe விமானம் flybee விமானமாகிய ஆச்சரியம்



ஒரே ஒரு தேனீயால் விமானமே தரையிறக்கப்பட்டுள்ள விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு பிளைபி (Flybe) ஏர்லைன்’சின் BE384 பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த விமானி விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பியுள்ளார்.

விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதன் வால் பகுதியில் குட்டியாக ஒரு கருப்புத்தேனீ இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விமானத்தின் வால் பகுதியில் உள்ள இறக்கையில் சிக்கிய அந்தத் தேனீதான் தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணமானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர், தேனீ(bee) மோதியதால் flybe விமானம் flybee விமானமாகிவிட்டது என்று டைமிங் ஜோக் அடிக்க, சிரித்தபடி பயணிகள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்

Related posts

உடல் அடக்கத்திற்கான அனுமதி வரவேற்கத்தக்கது

wpengine

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதிக்கு..

wpengine

ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுல்லாப் பயணிகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine