உலக செய்திகள்

ஈரானுடனனான அனைத்து விதமான இராஜதந்திர உறவுகளையும் முறித்துக் கொண்டது மாலைதீவு



ஈரானுடனனான அனைத்து விதமான இராஜதந்திர உறவுகளையும் முறித்துக் கொண்டதாக மாலைத் தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், ஈரானுக்கு எதிரான சவுதியின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு சார்பாக மாலைத் தீவும் கைகோர்த்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா அரபுப்பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஈரானின் கொள்கைகள் காரணமாகவே இந்த முடிவை அரசாங்கம் எடுத்ததாக மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மை மாலைதீவின் அமைதி மற்றும் பாதுகாப்புடன் தொடர்ப்புபட்டுள்ளதாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவிற்கு பின்னர் ட்ரம்ப் இனது வினோத ஆசை 

wpengine

லிபிய விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது…

wpengine

படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…

wpengine