ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மங்களவிடமிருந்து மஹிந்தவுக்கு திறந்த மடல்



வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த  கடிதமானது 20 பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த கௌரவமாக அரசியலில் இருந்த ஓய்வு பெறவேண்டும் எனக் கோரியே இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் இனக்கலவரத்தை உண்டு பண்ணி அதில் அரசியல் இலாபத்தை தேடவேண்டாம் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும் மங்கள சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்இணைந்து 80களில் நடாத்திய அரசியல் பயணம் தொடர்பில் குறித்த கடிதத்தில் நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக 80களில் மஹிந்த மேற்கொண்ட நடவடிக்கைகள்தொடர்பிலும் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

சங்கா vs கோட்டா – சூடாகும் 2020ம் ஆண்டுக்கான அரசியல் பிரவேசம்…

wpengine

தொலைபேசி பாஸ்வேர்டினால் மனைவி கொலை

wpengine

22-06-2015 கேலிச் சித்திரம்

wpengine