உள்நாட்டு செய்திகள்

இனி 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர் பட்டியலில்..



2016ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கான படிவங்கள் தற்போது நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடம் ஜுன் மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்த இலங்கை பிரஜைகளை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் படிவங்கள் கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள்  ஜுன் மாதம் 15ஆம் திகதி முதல் ஆகஸ்ட் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் வாக்காளர் படிவங்கள் வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

O/L மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

wpengine

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வுகள் இன்று

wpengine

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த முன்னணியின் சின்னம் இதோ

wpengine