உள்நாட்டு செய்திகள்

2கோடி கப்பம் கோரல் – பிரதான சந்தேகநபர் பொறியியல் பட்டதாரி



வாரியபொல பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா கப்பம் கோரல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் பொறியியல் பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு கோடி ரூபா கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரது 20 வயது மகனை ஒரு கும்பல் கடத்தியிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரமிட் திட்டமொன்றின் ஊடாக பாரிய நட்டமடைந்த நபர் அதனை ஈடு செய்ய இவ்வாறு சிலருடன் இணைந்து கப்பம் பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

2013ஆம் ஆண்டு மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இந்நபர் பொறியியல்துறை பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர்களுடன் வாரியபொல ஆங்கில தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் உள்ளடங்கலாக மேலும் மூன்று பேர் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

 

Related posts

குருநாகலை மாநகர சபையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

wpengine

ரயில் சேவைகள் வழமைக்கு

wpengine

வவுனியா நகர சபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

wpengine