உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சிவாஜிலிங்கத்தை உடனடியாய் கைது செய்ய வேண்டும் – பிரசன்ன



விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க , விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் இன்றும் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் அங்கு மேலும் கூறுகையில் ,

வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இன்று பகிரங்கமாக விடுதலை புலிகளை நினைவு கூர அழைப்பு விடுகின்றார். ஆனால் இதற்கு எதிராக அரசாங்கம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பதாக கூறியே இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். ஆனால் தற்போது பிரிவினைவாதம் பேசி நாட்டை மீண்டும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.

எனவே அரசாங்கம் உடனடியாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 

Related posts

பிரதமரின் விஷேட உரை இன்று

wpengine

அலி ரொஷான் உட்பட 07 பேரும் விடுதலை…

wpengine

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு

wpengine