உள்நாட்டு செய்திகள்

மின்சார வசதி இல்லாதவர்களுக்கான மூன்று மாதங்களுக்குள் மின்சாரம்



வடமாகாணத்தில் மின்சார வசதி இல்லாதவர்களுக்கான மூன்று மாதங்களுக்குள் மின்சாரம் வழங்க அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

வட மாகாணத்திற்கான உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதியமைச்சர் நேற்று(13) யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

´இருள் அகன்று முழு நாடும் ஒளி மயம்´ என்னும் தொனிப்பொருளில் அரச அதிகாரிகளுடான சந்திப்பு ஒன்று, இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி தலைவர் குணத்திலக்க தலைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்புக்கு பிரதம அதிதியாக மின்சக்தி எரிசக்தி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Related posts

வேலையில்லா பட்டாதாரிகளால் ஆர்ப்பாட்டம்

wpengine

இங்கிலாந்து, முதலாவது இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 336 ஓட்டங்கள்…

wpengine

கிரிக்கெட் வீரர் பானுக்கவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

wpengine