உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை – GSP பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு



பிரசல்ஸ்ஸில் நேற்று இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பு தொடர்பில்  கருத்துரைத்த ஹர்ச;

இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதிக்கட்டத்தை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்னதான இறுதி பேச்சாக அமைந்திருந்தது.

இதில் இலங்கையின் சார்பில் பொது வர்த்தக பணிப்பாளர் சோனாலி விஜேயரட்ன உட்பட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

 

Related posts

களுத்துறையில் வலுக்கும் கொரோனா

wpengine

மீண்டும் பொலிஸ் ஊடக குழு நியமனம்

wpengine

“நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல.. மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவேன்”- ஜனாதிபதி ரணில்

News Editor