உலக செய்திகள்

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



பங்காளதேஷ் நாட்டின் விடுதலைப் போரின்போது விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் நிசாமிக்கு போர்க்குற்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் நேற்றிரவு(10) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதியிடம் கருணை கோர விரும்பாததால் நிஜாமி நேற்று இரவு தூக்கிலிடப்பட்டார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் அசாது ஜமான் கூறுகையில்,

“நிசாமி தனக்கான கடைசி வாய்ப்பாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும்படி கேட்கப்பட்டது. அவர் கருணை கோரவில்லை.

எனவே, மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது” என்றார்.

Related posts

ஹாங்காங்கில் அவசர நிலை பிரகடனம்

wpengine

வங்கக் கடலில் நிலநடுக்கம்…

wpengine

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு..

wpengine