உள்நாட்டு செய்திகள்

ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையில் அமைச்சர் ரிஷாதுக்கு எதிரான குறித்த செய்தி பொய்யானது – வீ.ஜெயதிலக



அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியூதின் வவுனியா – நாமல்கம பகுதியில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்யவில்லை என, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் நோக்குடன் ரிஷாட் பதியூதின் முஸ்லிம்களை அங்கு குடியேற்ற முற்படுவதாக வதந்தியான செய்திகள் வௌியாகின.

இந்நிலையில் குறித்த செய்தியை முற்றாக மறுத்துள்ள அக் கட்சியின் உப தலைவர் வட மாகாண சபை உறுப்பினர் வீ.ஜெயதிலக, நாமல்கம கிராமம் முழுவதும் சிங்களவர்கள் வசிப்பதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதாகவும் அதனைக் குழப்ப நினைக்கும் சிலர், அமைச்சருக்கு எதிராக இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பால் மா இறக்குமதியை குறைக்க திட்டம்..!

wpengine

சட்டமா அதிபர் சிறைச்சாலைக்கு

wpengine

பல பிரதேசங்களில் 28 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine