ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சட்டவிரோத இறைச்சி விற்பனை – ஒருவர் கைது


ஹம்பாந்தோட்டை, அந்தரவேவ பகுதியில் சட்டவிரோதமான முறையில், மான் இறைச்சியை விற்பனை செய்த ஒருவர் வன அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது வீட்டிலேயே குறித்த விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபா் சட்டவிரோதமான முறையில், விலங்கு வேட்டைக்காரர்களின் உதவியுடன் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என வன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நபர் மான் இறைச்சியை சமைத்து உணவுப் பொதிகளாக விற்பனை செய்து வந்துள்ளார் எனவும், குறித்த சந்தேகநபரிடம் இருந்து பல விலங்குகளின் இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபரை இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செவ்வாய்க் கிரகத்தில் வேலைவாய்ப்பு – நாசா அதிரடி அறிவிப்பு (PHOTOS)

wpengine

“கிரிக்கெட் வீரர்களே, Fitness குறித்து அவதானம் செலுத்துவது இப்படித்தான்” Gym சென்ற அமைச்சர் ஜயாசிறி..! (PHOTOS)

wpengine

வீட்டுக்கு சென்ற யோசித

wpengine