உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே மருத்துவ கல்லூரி பல உயிர்களை குடிக்க ஏங்குகிறது – மருத்துவ பீட மாணவர்களின் தலைவர் ரயன்



கடந்த அரசு மாணவர்கள் மீது மேற்கொண்ட அடக்கு முறையை சுட்டிக்காட்டியே நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட கடந்த அரசைப்போல் அடக்கு முறைகளை பின்னற்றுவதாகவும் மருத்துவ பீட மாணவர்களின் தலைவர் ரயன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ரயன்,

தற்போது, அரசுக்கு நெவில் பிராணாந்துவின் பணம் தேவைப்படுகின்றது, மாலபே மருத்துவக் கல்லூரியின் தலைவர் அவரே. அவருடைய பணத்திற்காக ரணில், மைத்திரி அரசு வெட்கமே இல்லாமல் செயற்படுகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி நிர்மணிக்கப்படும் போது, பல மேசடிகள் செய்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவ கல்லூரிக்கு இணையும் மாணவர்களையும் ஏமாற்றியே சேர்த்துக் கொண்டது எனவும் இதன்போது, ரயன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போதியளவு பயிற்சிகள் கொடுக்காமல் மாணவர்களுக்கு வைத்தியர்கள் என்ற சான்றிதழ் வழங்குவதற்கு மாலபே மருத்துவக் கல்லூரி தயாராக இருந்துள்ளது என கூறினார்.

மேலும் இதன்மூலம் பாதிக்கப்படுவது மக்களே, இவர்களுக்காகவே நாம் போராடினோம், அப்படி நடந்தால் மக்களுக்கு பாரிய உயிர் அச்சுறுத்தலாக இது உருவெடுக்கும் என குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசு இதற்கு ஆதரவு வழங்குவதாகவும், இதன்போது மருத்துவ பீட மாணவர்களின் தலைவர் ரயன் சுட்டிக்காட்டினார்.

Related posts

பண்டாரவளை குப்பை மேடு சரியும் அபாயம் – குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை..

wpengine

பட்டதாரி வெற்றிடங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

wpengine

மண்சரிவு காரணமாக ரயில் சேவையில் பாதிப்பு

wpengine