உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு மே மாத ஆரம்பத்துடன் நீக்கப்படும் – ஜனாதிபதி



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதியின் பின்னர் நீக்கிவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை அறிவித்திருந்தார். அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதில்லையென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தையடுத்து மஹிந்தவின் பாதுகாப்பிலிருந்து இராணுவம் நீக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பை நீக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சந்திப்பொன்றின் போது இராணுவ பாதுகாப்பை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு…

wpengine

கண்காணிப்பு தகவல்கள் திங்களன்று

wpengine

அமைச்சரவை மாற்றங்கள்

wpengine