உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு



தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தவைரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் மீதான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்து இலட்சம் ரூபாவை தாண்டிய மின் கட்டணம் : திம்புலாகல விகாரையில் மின்துண்டிப்பு..!

wpengine

இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கத்துக்கு இணக்கமா இல்லையா எங்களுக்கு தெரியாது – ரிஷாத் பதியுதீன்

Azeem Kilabdeen

சேவையில் இருந்து விலகியவர்களுக்கான அறிவிப்பு

wpengine