உள்நாட்டு செய்திகள்

பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் பிரதான அதிகாரியான நகுலன் கைது



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிவமூர்த்தி கணபதிபிள்ளை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.கோப்பாயில் வைத்தே அவர், நேற்றையதினம்(26) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர் வழங்கிய தகவல்களுக்கு அமைவாகவே நகுலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நகுலன், தனது மனைவியுடன் வாழ்ந்துவருகின்றார். அவர்களுக்கு நான்கு வயதில் பிள்ளையொன்றும் இருகின்றது.

Related posts

400 ஆண்டுகளின் பின் நிகழவுள்ள அதிசயம்

wpengine

உயர்தரப் பரீட்சையின் போது பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை

wpengine

இந்நாள் – முன்னாள் ஜனதிபதிகளிடையே சந்திப்பு

wpengine