விளையாட்டு

சாம்பியன் லீக் இறுதியாட்டம் ஆரம்பம்



ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் மைதானத்தில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று  (6) இடம்பெறுகின்றது.

இதில் ஸ்பெயின் சாம்பியன் அணியான பார்சிலோனாவும், இத்தாலியன் லீக்கில் கோப்பை வென்ற ஜூவென்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த 10 சீசன்களில் நான்காவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது முறையாகவும் ஐரோப்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் கனவுடன் பார்சிலோனா களமிறங்குகிறது.

ஜூவென்டஸ் அணியோ மூன்றாவது முறையாக இந்த கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பார்சிலோனாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. இரண்டு கிளப் அணிகளும் மகுடம் சூடுவதற்கு மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்…

wpengine

2019ம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிற்கான அட்டவணை வெளியாகியது…

wpengine

Nesta Carter இனால் Usain Bolt இனது தங்கப்பதக்கம் பறிபோகுமா…?

wpengine