உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் தனி ஈழத்தை அமைப்பேன் – ஜெயலலிதா சவால்



இலங்­கையில் தனி ஈழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை எமது கட்சி தொடர்ந்து மேற்­கொள்ளும் என்று அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழ­கத்தின் தலை­வரும் தமி­ழக முதல்வருமான ஜெய­ல­லிதா தெரி­வித்­துள்ளார்.

திருச்­சியில் நேற்று முன்தினம்(23) நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தனி ஈழம் எய்­திடும் வகையில் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். இலங்கை தமி­ழர்கள் மீது போர் குற்­றங்கள் மற்றும் இனப்படு­கொலை நிகழ்த்­தி­ய­வர்கள் மீது, சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசாரணை நடத்­தப்­பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கிறேன்.

இலங்கை தமி­ழர்கள் முழு சுதந்­திரம் மற்றும் சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழ்ந்­தி­டவும், தனி ஈழத்தை எய்­திடும் வகையிலும் தொடர்ந்து நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்­க­ளுக்கு வெளியே உள்ள இலங்கை தமி­ழர்கள் பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வரு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வசதிகளையும், உத­வி­க­ளையும், அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்றக் கழக அரசு அளித்து வரு­கி­றது.

அத்துடன் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்

Related posts

அஸா த் சாலிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு – வியூகம்

wpengine

ஷசிக்கு நாளை விசாரணை பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது

wpengine

கிரிக்கட் போட்டியின் போது இங்கிலாந்தில் இலங்கைத் இளைஞன் பலி

wpengine

1 comment

Ibnuaboo Apr 25, 2016 at 5:36 pm

Election fever symtem

Comments are closed.