உள்நாட்டு செய்திகள்

பரணகம ஆணைக்குழுவின் இறுதி அமர்வு வடமாகாணத்தில் இன்று


காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு, வடமாகாணத்தில் தமது இறுதி சாட்சிப்பதிவுக்கான அமர்வினை இன்று(25) ஆரம்பிக்கிறது.
இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களுக்கான சாட்சிப் பதிவுகள் இன்று நடைபெறவுள்ளன.
இன்றையதினம் 360 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாக, பரணகம ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு. குணதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நான்கு தினங்களுக்கு இந்த அமர்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

Related posts

மேலும் 75 நோயாளிகள் அடையாளம்

wpengine

ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிங்க ஜயவர்த்தன விலகல்

wpengine