உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பந்து தலையில் தாக்கிய கெளஷாலின் நிலைமை ஆறுதலளிக்கின்றது



உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பந்து தலையில் தாக்கி காயமடைந்ததாக நேற்றையதினம் (24) இலங்கை வீரர் கௌஷல் சில்வா கொழும்பு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கௌஷல் சில்வா, இலங்கை அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி இதுவரை 1404 ரன்கள் குவித்துள்ளார்.

உள்ளூர் போட்டி ஒன்றில், பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பேட்ஸ்மேனுக்கு அருகில் நின்றதால் பந்து தலையில் பட்டது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் துணை கெப்டன் தினேஷ் சந்திமால் கூறுகையில்,

சில்வாவின் பின்பக்க தலை அடிபட்டு வீங்கி உள்ளது.

பந்து தாக்குவதிலிருந்து தப்பிக்க முயற்சித்த போதும் அது பலனிக்கவில்லை.

அவுஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப்ஸ் ஹியூஸின் மரணத்திற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய ஹெல்மேட்டை தான் சில்வா அப்போது அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, இங்கிலாந்து அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளதால் அதற்கான பயிற்சி ஆட்டங்களை இலங்கை வீரர்கள் மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 19-ல் இந்தப் போட்டிகள் தொடங்க உள்ளன.

Related posts

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு

wpengine

HNDA பாடநெறி குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை – லஹிரு வீரசேகர

wpengine

இந்தியாவிடம் அவசராமக உதவி கோரப்பட்டுள்ளது

wpengine