ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

4 கிலோ தங்க சட்டை அணிந்து வந்த தங்கத் தொழிலதிபர்



மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பங்கஜ் பராக். பள்ளி படிப்பு வரை படித்துள்ள இவருக்கு இன்று 45-வது பிறந்தநாள். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இவரது தம்பியின் திருமண நிகழ்ச்சியில் 4 கிலோ எடையில் தயாரிக்கப்பட்ட தங்க சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளாராம்.

இவரை கண்டதும், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு இவருடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். மேலும் பலர் தங்களது செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர்.

பின்னர் பங்கஜ் பராக் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

எனக்கு சிறு வயதிலிருந்தே தங்கம் மீது அலாதி பிரியம். எப்போதும் நான் 3 கிலோவுக்கு குறையாமல் தங்க நகைகளை அணிவது வழக்கம்.

தற்போது கூட நான் 3 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளேன். எனது மூக்கு கண்ணாடி கூட 30 கிராம் எடையில் செய்யப்பட்டது.

எனது 45-வது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை (இன்று) வருகிறது. இதற்காக சுமார் ரூ. 1 கோடி செலவில் தங்க சட்டை தைத்து அணிந்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் ஒரு நாள் முன்னதாக எனது தம்பியின் திருமணம் நடைபெறுவதால் இதற்காக இந்த சட்டையை அணிந்து கொண்டேன், என்றாராம்.

Related posts

திருமண நிகழ்வில் ‘Lift’இயங்காமையினால் kingsbury இடமிருந்து 50 இலட்சம் நட்டஈடு…

wpengine

பொது தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்; பிரபாகரனுக்கு புகழாரம்

wpengine

ரத்கம வர்த்தகர்களது குடும்பத்தினர் எதிர்கட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை.. (PHOTOS)

wpengine