விளையாட்டு

பாகிஸ்தானில் விளையாட மேற்கிந்திய தீவுகள் அணி மறுப்பு


பாகிஸ்தான் மைதானங்களில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள் அணி மறுத்துள்ளது.
இதன் காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், இலங்கை கிரிக்கெட் அணியினர் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தப்பட்டதை அடுத்து மற்ற அணிகள் பாகிஸ்தான் செல்ல தயங்குகின்றன.

இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர்  மாதங்களில் ஐக்கிய அரபு ராச்சியம், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு ஆகிய அணிகள் கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கவுள்ளன.

இரண்டு டெஸ்ட், 5 ஒருநாள், 2 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரின் சில போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம், பாகிஸ்தான் கிரிக்கட் சபையினால் அனுமதி கோரப்பட்டது.

எனினும், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை அனுமதி மறுத்த நிலையில், ஐக்கிய அரபு ராச்சியத்திலேயே அனைத்து போட்டிகளையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை மண்ணில் தொடரினை வென்று புதிய ஆண்டை ஆரம்பிப்போம் – ஹத்துருசிங்க அதிரடி…

wpengine

வரலாற்றினை மாற்றிய பாகிஸ்தான் – 100 கோடி ரசிகர்கள் ஆதரவு

wpengine

சங்காவின் 15 வருட சாதனையை முறியடித்த குசல் மற்றும் அசேல…

wpengine