ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சு.க மேதினத்துக்கு மஹிந்தவுக்கு பதிவுத் தபால் மூலம் ‘அழைப்பு’!



காலியில் இடம்பெறவிருக்கும் சு.கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின
நிகழ்வுக்கு தனக்கு அழைப்பு
விடுக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பகிரங்கமாக
தெரிவித்துள்ள நிலையில் நேற்றைய தினம் அவருக்கு
தொலை நகல் மூலம் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

பதிவுத் தபால் மூலமும் குறித்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக சு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை மே தினம் என்பது
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் தினம், தொழிலாளர் உரிமைகளை அரசிடமிருந்தே
பாதுகாக்க வேண்டும் எனும் போது அரசாங்கத்தோடு இணைந்து கூட்டத்தில் கலந்து கொள்வதால்
என்ன பயன் என கேள்வியெழுப்பியுள்ள மஹிந்த
ராஜபக்ச, ஏற்கனவே ஒரு திருமணத்துக்கு வருவதாக வாக்குக் கொடுத்த பின் இன்னொரு திருமணத்துக்கு செல்ல முடியாது எனவும் விளக்கமளித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

Related posts

மணக்கோலத்தில் ஹர்பஜன்,கீதா கரம் பிடித்தனர்

wpengine

லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

wpengine

முன்னாள் ஜனாதிபதிக்கு நான்கு டயர்களை வழங்கிய பிரதமர்!

wpengine