உள்நாட்டு செய்திகள்

மலேரியா நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கும் இலங்கை


மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் நுவரெலியாவில்அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரிவின் வைத்தியர் எச்.டபிள்யூ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய தினம் நுவரெலியாவில் அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையான மலேரியா நோயாளியுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 16 மலேரியா நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்குள் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளங் காணப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை வைத்திய அதிகாரிகள்சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

இலங்கையுடனான வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் நியுசிலாந்து அரசு அவதானம்…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுங்கள் – மைத்திரிபால சிறிசேன..!

wpengine

தென்னாப்பிரிக்கா உடனான போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி

wpengine